பிள்ளைங்க ஸ்கூலுக்கு போக முடியல..! கடையில் ஜாமான் வாங்க முடியல..! மொத்தமா ஒதுக்கிட்டாங்க! பட்டப்பகலில் மூதாட்டி செய்த செயல்!

ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மூதாட்டி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தூத்துகுடி மாவட்டம் நக்கலைக்கோட்டையைச் சேர்ந்த முத்தால்ராஜ் என்பவர் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தினை வாங்கியுள்ளார். அந்த நிலத்தினை ஊர் பயன்பாட்டுக்காக பொது மக்கள் ஒன்று சேர்ந்து வாங்க இருந்ததாகவும், ஆனால் ஊர்க்கட்டுப்பாட்டை மீறி முத்தால் ராஜ் வாங்கியதாக கூறி முத்தால் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் என 6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முத்தால் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என அரசு அதிகாரிகள் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை எனவும் தெரிகிறது. ஊரைவிட்டு ஒதுக்கியதால், கடைகளில் பொருட்கள் தருவதில்லை. உள்ளூர் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, குழந்தைகள் பள்ளிகளுக்கு ஆட்டோவில் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இதையடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது முத்தால் ராஜ் என்பவரின் சகோதரி சண்முகவேல் தாய் கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஊரைவிட்டு ஒதுக்கியதாக கூறப்படும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டிசம்பர் 16-ம் தேதி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனாலும் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறி மனமுடைந்த சண்முகவேல் தாய் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.