எழுத்தாளர்கள் என்றாலே முன்பு மக்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால், அழுக்கு ஜிப்பாவும், மழிக்காத தாடியும், புரியாத பேச்சுமாகத் திரிவார்கள்.
கொலையும் செய்வான் எழுத்தாளன்! சென்னையை அதிர வைத்த பாடல் ஆசிரியர் - பிரான்சிஸ் கிருபா!

ஆனால், இப்போது ஃபேஸ்புக் மற்றும் ஆன்லைன் உபகாரத்தால், எழுதுபவர் எல்லாமே எழுத்தாளர் ஆகிவிட்டனர். அதனால் எழுத்தாளர் என்று தனியே யாரும் உரிமை கொண்டாட முடியாமல் போனது. இந்த நிலையில்தான் கோயம்பேட்டில் போதையில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்ட குற்றத்திற்காக பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரது மல்லிகைக்கிழமைகள்,, ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்கள் பிரபலமானவை. விகடன் விருது, சு.ரா. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சமீப காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இவர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்த ஒருவருக்கும் இவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பிணத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அருகிலேயே அமர்ந்திருந்த பிரான்சிஸ் கிருபாவை கைது செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. நான் வேற்றுகிரக வாசி என்பது போன்று சம்பந்தமில்லாமல் உளறி வருகிறாராம். இதோ, அவரது இரண்டு கவிதைகள்....
பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண் யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.
கண்ணைக் கசக்கி அழுதபடி
கரையில் நடந்து வரும்
பேசப்பழகாத குழந்தையை எதிர்கொண்டு
'அம்மா' எங்கே என்று
அன்பொழுக வினவுகிறார்கள்.
அது தன் இடது கையை
ஆற்றின் மேல் நீட்டுகிறது.
அந்தக் குழந்தையை தூக்கி
ஓடும் நீரில் வீசிவிட்டு போகிறார்கள்
இடது கை செய்தது
வலது கை அறியாது.