மீண்டும் பாகிஸ்தானை நோக்கி! அடிச்சி தூக்க போகும் அபிநந்தன்!

பாக்கிஸ்தான் இராணுவத்திடம் இருந்து விடுபட்டு தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை தளத்தின் விங் கமாண்டர் அபிநந்தன் சூரத்கரில் பதவி ஏற்றார்


கடந்த சனிக்கிழமையன்று  ராஜஸ்தானின் சூரத்கரில் அவருக்காக நியமிக்கபட்ட பதவியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் முன்னதாக  பிகானேரில் பணியாற்றினார்.  மேலும் அபிநந்தன் தனது படிப்பை ராஜஸ்தானில் தான் முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடந்த வான்வழி தாக்குதலில் எதிர்பாராதவிதமாக பாக்கிஸ்தான் இராணுவத்திடம் கமாண்டர் அகப்பட்ட செய்தியை அடுத்து அவர் அடிக்கபடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது இந்த சம்பவம் இந்திய மக்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அதனை அடுத்து அவர் பாதுகாப்பாக இருப்பதாக தானே அளித்த வீடியோவினால் அந்நாட்டின் இராணுவம் தனது நிலையை காப்பாற்றிக்கொண்டது எனலாம்..

ஏறக்குறைய 60 மணிநேர நீண்ட போராட்டட்திற்க்கு பின்னர் கமாண்டர் அபிநந்தன் வர்மன் கடந்த மார்ச் 1 ஆம் தேதி இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கபட்டார்.. அவரது வீரம் செறிந்த  நடத்தை இந்தியர்களீடம் பெரும் உற்சாகத்தையும், கிட்டத்தட்ட ஒரு ரியல் ஹீரோவிற்கான மதிப்பையும் பெற்றுதந்தது எனலாம்

அபிநந்தனின் உடல் நிலை பாதிப்பு காரணமாக அவர் தாயகம் திரும்பியதும் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சூரத்கரில் பதவியேற்ப்பிற்காக சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன .இருப்பினும், இந்த தகவலை உறுதிபடுத்துவதற்க்காக அந்த துறைசார்ந்த உயர் அதிகாரியை அணுகிய போது அபிநந்தன் பதவி பற்றிய எந்த தகவலும் வெளியிட முடியாது எனவும். அது பாதுகாப்பு கருதி இரகசியமாக கையாளபடுகிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சூரத்காரில் உள்ள உள்ளூர் ஆதாரங்கள், ஐ.ஏ.ஏ. நிலையத்தில் அபிநந்தன் சேர்ந்துள்ளதாகவும், "சூரத்கர் விமானப்படைத் தளம் மிக் -21 பைசன் விமானத்தைக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்டுகிறது  மேலும அபிநந்தன் எந்த நேரத்திலும் விமானத்தில் மீண்டும் பறக்கலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த தளம் பாகிஸ்தானுக்கு மிக அருகே உள்ளது.

பிப்ரவரி 27 ம் தேதி பாகிஸ்தானிய இராணுவத்தால் அபிநந்தன் பிடிபடுவதற்க்கு முன்னதாக  அவரது மிஜி -21 பைசன் ஜெட் ஒரு வான்வழி போரில் பாக்கிஸ்தான் ஜெட் விமானங்களைக்  நொறுக்கி வீழ்த்தியது குறிப்பிடதக்கது