விக்கிரவாண்டியில் விஜயகாந்த் கர்ஜிப்பாரா? கூட்டணிக் கட்சிக்காக களம் இறங்குகிறார்!

விக்கிரவாண்டி தொகுதியை எங்களுக்குக் கொடுத்தால் நானே தேர்தலில் நிற்பேன் என்று ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. கூட்டணியில் பஞ்சாயத்து இழுத்து வைத்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்.


அதனாலோ என்னவோ வேகவேகமாக ஓடிவந்து அமைச்சர்கள் விஜயகாந்தையும் பிரேமலதாவையும் சந்தித்து ஆதரவு கேட்டனர். உடனே பிரேமலதாவும் பெருந்தன்மையாக அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். இந்தத் தொகுதியில் 2016 தேர்தலில் தே.மு.தி.க. கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. அதனால்தான் தே.மு.தி.க.வுக்கு செம மரியாதை. 

பிரேமலதா பிரசாரம் செய்து முடித்துவிட்ட நிலையில், வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்ய இருப்பதாக இன்று தே.மு.தி.க. அறிவிப்பு செய்திருக்கிறது. திருப்பூரில் நடந்த மாநாட்டில் இந்த விஜயகாந்துக்கு ஒரு நாள் விடியும். அப்போது தொண்டர்களை தங்கத்தாம்பாலத்தில் வைத்து தாங்குவேன் என்று பேசினார் விஜயகாந்த்.

அந்த இரண்டு வரி பேசுவதற்கு கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். இப்போது அவரது பேச்சு நல்லபடியாக முன்னேற்றம் அடைந்திருப்பதால், அவராகவே பேசுவார் என்று சொல்கிறார்கள்.

நல்லா பேசுங்க கேப்டன்.