வைகோ பிரச்னை தீருமா தீராதா? ஸ்டாலினிடம் கொந்தளித்த அழகிரி!

ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவில்லை. ஏனென்றால், அங்கே வந்தால் தேவையின்றி வைகோவுடன் காரசாரமாக முட்டல் மோதல் ஏற்படலாம் என்பதாலே எட்டிப் பார்க்கவில்லை.


ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கெடுக்காதது குறித்து ஸ்டாலினிடம் விளக்கம் கூறுவதற்கு போனில் பேசியிருக்கிறார் அழகிரி. அப்போது வைகோ குறித்து பொங்கித் தீர்த்துவிட்டாராம்.

அப்போது, ‘‘இந்த கூட்டணி தொடரணும்னு நாங்க ஆசைப்படுறோம், ஆனா. வைகோ எண்ணம் வேற மாதிரி இருக்கு. அவர் மோடியின் கைப்பிள்ளையாக மாறிவிட்டார். அதனால் பா.ஜ.க.வுடன்  சமாதானமாகிவிட்டார். 

அத்வானி வீட்டுக்கு போயி பட்டு சால்வை போர்த்தி குடும்பத்தோட அத்வானி காலில் விழுந்திருக்கிறார். இதை தப்புனு நான் சொல்ல வரலை. ஆனால், அவர் அதிகமாக பா.ஜ.க.வினரிடம் மட்டும்தான் பழகுகிறார். அங்கே காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை.

உண்மையில் வைகோவுக்கு காங்கிரசை திட்டணும்னு நோக்கம் கிடையாது. திமுக கூட்டணியை உடைக்கணும்னுதான் அவர் அஜெண்டா. இதற்காக அவர் எந்த எல்லைக்கும் போவார். ஏற்கெனவே இரண்டு முறை தி.மு.க.வின் தோல்விக்கு அவர்தான் காரணமாக இருந்தார் என்பதை மறக்க வேண்டாம். அவரை கண்டித்து வையுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

வைகோவுக்கு ஆதரவாக அமைதியாக இருந்த ஸ்டாலின் இப்போதுதான் யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம். சீக்கிரம் யோசிச்சு முடிவெடுங்க தலைவா, அதுக்குள்ள கூட்டணியை உடைச்சுடப் போறார்.