உதயநிதியின் பதவி தி.மு.க.வை இரண்டாக உடைக்குமாம்! கொந்தளிக்கும் அமைதி உடன் பிறப்புகள்!

எனக்கு பதவி வேண்டாம் என்று உதயநிதி சொன்னாலும், உனக்கு மட்டும்தான் பதவி என்று எடுத்துக்கொடுத்திருக்கிறார் வாரி வழங்கும் வள்ளல் ஸ்டாலின்.


இன்று தி.மு.க.வில் ஸ்டாலினை சுற்றியிருப்பது எல்லாமே அ.தி.மு.க.வில் இருந்து ஐக்கியமானவர்கள்தான். எ.வ.வேலு மற்றும் சேகர் பாபுவை மீறி யாரும் ஸ்டாலின் பக்கத்தில் நெருங்க முடியாது. இதுதவிர வரிசையாக தி.மு.க.வுக்கு வருபவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, கனிமொழி, தயாநிதி மாறன் இருவரும் டெல்லிக்கு வாரிசாகி விட்டார்கள். தமிழகத்திற்கு உதயநிதி தலையெடுத்துவிட்டார். இவர்கள் அனைவரையும் கண்ணுக்குத் தெரியாத கயிறில் கட்டி இயக்குகிறார் சபரீசன்.

ஆக, வாழைப்பழத்தை முழுமையாக ஸ்டாலின் குடும்பமே சுவைத்துக்கொண்டு, தோலை மட்டும் வெளியே வீசுகிறது. இதை எல்லோருமே கேள்வி கேட்க முடியும். ஏனென்றால், தி.மு.க. என்பது கருணாநிதி தொடங்கிய கட்சி அல்ல. 

திமுக வை அண்ணா தொடங்கினாலும், அண்ணாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தாலோ அல்லது அப்படி ஒரு நடைமுறையில் அவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ அடுத்தபடியாக திமுக வை கருணாநிதி தனதாக்கிக் கொண்டார். ஆக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.. இவர்களது குடும்பத்தில் அந்தப் பிரயத்தனத்தின் நீட்சியாக உதயநிதி ஸ்டாலின்.  

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஸ்டாலினுக்கு மகனாகப் பிறந்தார், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பேரனாகப் பிறந்தார் என்ற தகுதி மட்டுமே போதுமா கட்சியின் இளைஞரணிச் செயலாளராக ஆக்கப்படுவதற்கு. திமுக, சங்கர மடம் அல்ல என்று சொன்ன தலைமை இது குறித்து சிந்திக்க வேண்டுமில்லையா?

சிந்திக்காததன் விளைவு விரைவில் தெரியும் என்கிறார்கள். தி.மு.க.வை உண்மையில் நேசிக்கும் ஒரு தலைவர் தலைமையில் மாபெரும் பிளவு நடக்கப்போகிறது என்கிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த பிளவு நடந்தே தீருமாம். பார்க்கலாம்.