கொரோனாவை சமாளிப்பாரா உதயசந்திரன்..? திடீர் நியமனம்.

நேர்மைக்கும், திறமைக்கும் பேர்போன உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., கல்வித் துறையில் பல சாதனைகள் நிகழ்த்தினார்.


அதனாலே அங்கிருந்து விரட்டப்பட்டார். இப்போது, உதயசந்திரனை கொரானோ காலச் சிறப்பு அதிகாரியாகச் சென்னை நகரத்தை இணைக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள். 

இதற்கு நடுநிலையாளர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனென்றால், எடுத்துக்கொள்ளும் வேலையை மிகுந்த உத்வேகத்துடனும், ஆத்மார்த்தமாகவும் செய்ய விரும்பக் கூடியவர் உதயசந்திரன்.  

மக்கள் மரண பயத்தில் இருக்கும்போது, இவரைப் போன்ற அதிகாரிகளால்தான் நியாயமாக மக்கள் பக்கம் இருந்து செயலாற்ற முடியும். மக்களுக்கு அன்றாடப் பொருட்கள் கிடைப்பதற்கு உறுதி செய்வதே அவருடைய முதல் பணியாக இருக்கட்டும்.