தமிழிசைக்கு ஏழைன்னா அர்த்தம் தெரியுமா? தமிழ்நாட்டை விட்டு விரட்டனும்!

முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசின் வேகம் அபாரமானது.


யாரும், எதுவும் பேசிவிடும் முன்னரே, அதனை நிறைவேற்றி, தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவது மட்டும்தான் ஒரே குறிக்கோள். தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசு இந்த 10% இடஒதுக்கீட்டை நிராகரிப்பதே சரியான முடிவாக அமையும் என்றாலும், அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், அ.தி.மு.க. இப்போது முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான், இதனை நிறைவேற்றினால் நிறைய நன்மைகள், கூடுதல் சீட்டுகள் கிடைக்கும் என்று பேராசை காட்டுகிறார் பன்னீர் செல்வம்.

அட, பன்னீர்செல்வத்தை விட்டுவிடலாம், தமிழிசை பேசியிருப்பதை எந்த வகையில் சேர்ப்பது என்பதுதான் ஆச்சர்யம். அதாவது, ‘உயர் ஜாதியினருக்கு இருக்கும் பிரச்னைகளை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு 8 லட்சம் மட்டுமல்ல, ஆண்டுக்கு 20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்‘ என்று சொல்லியிருக்கிறார் தமிழிசை.

ஆண்டுக்கு எட்டு லட்சம் என்பது, மாதத்திற்கு 66 ஆயிரம் ரூபாய், அதாவது தினமும் 2 ஆயிரத்து 200 ரூபாய் பணம் சம்பாதிப்பவன் ஏழையாம். மலம் அள்ளுபவனுக்கும் வெயிலில் நின்று தார் ரோடு போடுபவனுக்கும், இரவு, பகலாக நிலத்தில் கிடைக்கும் விவசாயிக்கும் ஒரு நாள் கூலி என்னவென்று தமிழிசைக்குத் தெரியுமா? 

அவர்களுக்கு எல்லாம் பிரச்னைகள் இல்லையாம், வருடம் 8 லட்சம் சம்பாதிக்கிற உயர்சாதிக்கார 'அரியவகை' ஏழைக்கு அவ்வளவோ பிரச்சினையாம். இத்தகைய கேடுகெட்ட அரசியல் வியாதிகளை முதலில் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும், அப்போதுதான் புத்தி வரும்.