அமித்ஷாவின் அர்ஜென்ட் டெலிவரிக்கு ஆப்பு வைக்குமா சுப்ரீம் கோர்ட்..?

அமித்ஷாவின் அதிரடிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்ததும் ,அப்படி 370வது சட்டப்பிரிவு குறித்து வழக்கு தொடர முடியுமா?..


இது எமர்ஜென்சியா என்று கேட்ட வைகோவிடம்,இல்லை அர்ஜென்சி என்று பதிலளித்த வெங்கையா நாயுடுமுதல் கடைசி குடிமகன் வரை அனைவர் மண்டைக்குள்ளும்  குடையும் கேள்வி இது! 370 சட்டப்பிரிவில் திருத்தம் செய்யவோ ,ரத்துச்.செய்யவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

ஆனால்,அதற்கு சட்டமன்றத்தின் பரிந்துரை வேண்டும் என்று உட்பிரிவு 3 சொல்கிறது.ஆனால்,கடந்த நவம்பரிலேயே காஷ்மீர சட்டமன்றம் கலைக்கப்பட்டு விட்டதால்,370 சட்டப்பிரிவை திருத்தவோ , ரத்து செய்யவோ பாராளு மன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இது முதல் முறை அல்ல.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1952ல் ஒரு முறையும், 1962ல் ஒரு முறையும் இதுபோல திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்கிறார் அமித்ஷா.

ஏற்கனவே 2015ல் 370 பிரிவின் மீது தொடரப்பட்ட வழக்கில் 370 பிரிவில் திருத்தம் செய்யும் அதிகாரம் பாராளுகன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது, அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று அன்றைய தலைமை நீதிபதி தத்து சொல்லி இருக்கிறார். அதோடு 2018ல் ஒரு வழக்கில் 370வது பிரிவு தற்காலிகமானது அல்ல எந்து உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.ஆனாலும் டெல்லி சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாபிக் இதுதான்.