டெல்லிக்குப் போராடப் போகிறாரா ஸ்டாலின்? வைகோ எஸ்கேப்! சிதம்பரத்தை திகாரில் சந்திக்க வாய்ப்பு?

காஷ்மீர் மக்களுக்காகவும், காஷ்மீர் தலைவர்களுக்காகவும் தி.மு.க. சார்பில் டெல்லியில் வருகிற 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடி வரும் போது களத்தில் இறங்க தயங்கும் கட்சிகளுக்கு மத்தியில், ஒற்றைக் கட்சியாக தி.மு.க. மட்டும்தான் இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இந்திய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்தப் போராட்டம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போதே சலசலப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், இது காஷ்மீர் மக்களுக்கான குரல் மட்டுமல்ல. உலகமெங்கும் இருக்கும் சுதந்திரப் போராளிகளின் குரலாக இருக்கும்.

இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் கலந்துகொள்வார்கள் என்று ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். ஆனால், இன்னமும் வைகோ அதற்குத் தயாராகவில்லை என்று தெரிகிறது. ஏதேனும் ஒரு காரணத்தால் மருத்துவமனையில் இருக்கிறார். அதேபோன்று ராகுல், சோனியா போன்றவர்களும் கலந்துகொள்வார்களா என்று தெரியவில்லை.

இந்த நேரத்தில் இதுகுறித்து சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், டெல்லிக்குப் போகும் ஸ்டாலினுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அப்போது திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தைப் பார்த்து ஆறுதல் தெரிவித்துவிட முடியும் என்று போட்டிருக்கிறார். இதை ஸ்டாலின் பாணியில் சொல்வது என்றால், ஒரே மாங்காயில் இரண்டு கல்.