தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவாரா ஆர்.எஸ்.பாரதி..? வாய்க் கொழுப்புக்கு என்னதான் தண்டனை

எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டால் போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் நிலவுகிறது. இதற்கு கொஞ்சமும் விதிவிலக்கு இல்லாதவர் ஆர்.எஸ்.பாரதி.


உண்மையில், ஆர்.எஸ்.பாரதி முதலியார் பேசிய பேச்சுக்கு, அவரை அவரது கட்சியும் தலைமையும் இன்னேரம் கூப்பிட்டுக் கண்டித்து பகிரங்கமாக மன்னிப்புக் கூற ஆணையிட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடுமா தி.மு.க. என்று ஒரு பதிவு இணையதளத்தை கலக்கிவருகிறது.

இன்று உடன்பிறப்புகளின் சுயமரியாதை என்பது, ''டேய் நீங்க ஜட்டி போட்டிருக்க காரணமே திராவிடம் தாண்டா, டேய் நீ சோறு திங்கறதுக்கு காரணமே திராவிடம்தாண்டா'' என்கிற கேவலக் கூச்சல்தான். இவர்கள் பாஷையில் சுயமரியாதை, சமூக நீதி, சாதி ஒழிப்பு எல்லாம் சாதியை இழிவுபடுத்தி பேசுவது. அது சமூக நீதி இயக்கத்துக்கு ஒன்றும் புதிதல்ல.

திமுகவில் அமைச்சராக இருந்த அம்மா, போராளி சத்தியவாணி முத்துவை ஒருவர் சாதி பெயர் சொல்லித் திட்டியதும் அதற்கு பெரியார் ஈவெரா சொன்ன பதிலும் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மறக்கவே முடியாத போராட்டம் தான். அப்படியான சாதி ஒழிப்பு போரில் தான் இப்போது ஆர்.எஸ். பாரதி முதலியாரும் ஈடுபட்டுள்ளார். இதிலென்ன ஆச்சர்யம் ..

டீ கடையில் தொண்டர்கள் வம்பிழுத்துவிட்டால் அங்கு ஓடிப் போய் மன்னிப்பு கேட்கும் திமுக தலைவர் பெருமதிப்புக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்போது அமைதியாகத்தான் இருப்பார். பாவம் ஆர்.எஸ்.பி முதலியார் பண்ணிய பாவத்துக்கு அவர் ஏன் மன்னிப்புக் கோர வேண்டும்? அப்படி மன்னிப்பு கேட்கக்கூடிய அளவுக்கு இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?

அப்புறம், ஆர்.எஸ்.பி முதலியார் அவர் சாதி சங்கத்துக்கு தலைமை தாங்கிய போட்டோவை டிரால் பண்ணும் சகோதர்களே, அண்ணன் மானமிகு கே.என். நேரு அவர்கள் ரெட்டியார் சங்கத்துக்கு தலைமை தாங்கிய போட்டோக்கள் கிடைத்த போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? சாதி சங்கத்துக்கு போகாத திமுக தலைமைகள் யார் இருக்கிறார்கள்...காட்டுங்கள் பார்ப்போம்.

எனதருமை தாழ்த்தப்பட்ட பெரியாரிஸ்டுகளே, இன்னமும் நீங்கள் பெரியார் திடல் வாசலில் உட்கார்ந்து 'திராவிடம் திராவிடம்' என்று கூவிக்கொண்டு இருந்தால் திராவிடமும், திராவிடம் வளர்த்தெடுக்கும் சாதியும் இப்படித்தான் செருப்பால் அடிக்கும். வாங்கிக்கொள்ள திராணி இருந்தால் பெரியார் திடலே கதியென இருக்கவும்

நிற்க, ஆர்.எஸ்.பி முதலியாரின் கீழ்த்தரமான பேச்சைக் கண்டிக்காத முற்போக்காளர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் வணக்கத்தைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்... ஒவ்வொருமுறையும் தாழ்த்தப்பட்டவன் வார்த்தை வன்முறைகளையும் மற்றெல்லா வன்முறைகளையும் எதிர்கொள்ளும்போது இப்படி அமைதி காத்து என்ன புரட்சி செய்யப் போகிரீர்கள் தோழர்களே!

"ஆர்.எஸ். பாரதியின் பேச்சு சமூக நீதி பார்வையே அவரிடம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இப்படிப் பேசுவதன் மூலம் பெரியார், கலைஞரை கொச்சைப்படுத்துகிறார் அவர். நீதிக்கட்சி துவங்கி சமூக நீதிக்காக பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் தன் பேச்சின் மூலம் கொச்சைப் படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ். பாரதி.

இட ஒதுக்கீடு என்பதை பார்ப்பனர்கள்தான் ஏதோ சலுகை போல பேசுவார்கள். ஆர்.எஸ் பாரதியும் அப்படிப் பேசுவதைப் பார்த்தால், வர்ணாசிரம எண்ணம்தான் அவரிடம் ஊறிப்போயிருக்கிறது என்று தோன்றுகிறது. மூத்த வழக்கறிஞராகவும் மூத்த தலைவராகவும் இருப்பவரிடம் இப்படி ஒரு சிந்தனை இருப்பது, அவர் இன்னும் ஜாதிய உளவியலுக்குள் செயல்படுவதைத்தான் காட்டுகிறது. இதை ஏற்க முடியாது.

திராவிட இயக்கத்தை வீழ்த்துவதன் மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற சங்க பரிவார அமைப்புகள் முயற்சி செய்துவரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் அவர்களுக்கு உதவிசெய்வதாகவே அமையும்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.

இந்த கண்டனங்களை அடுத்து தனது பேச்சிற்கு ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதியிருக்கும் அவர், "பிப்ரவரி 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.

அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும்" என்று சொல்லியிருக்கிறார். அடப்பார்றா, இவரு திருந்திட்டாராம்.