எடப்பாடியாரின் காலை வாருகிறாரா டாக்டர் ராமதாஸ்? விக்கரவாண்டி வில்லங்கம்!

விக்கிரவாண்டி எடப்பாடிக்கு,நாங்குநேரி ஒபிஎஸுக்கு என்று உட்கட்சி தொகுதி உடன்பாடு முடிந்ததும் எடப்பாடியார் செய்த முதல் வேலை கூட்டணி கட்சிகளை கூப்பிட்டதுதான்.


விக்கிரவாண்டி தொகுதி மெஜாரிட்டியாக வன்னியர் வாழும் தொகுதி அதனால் முதல் அழைப்பு டாக்ட்டருக்குத்தான்.ஆனால்,அவரோ பிடிகொடுக்காமல் பேசி இருக்கிறார்.வேலூரிலும் டாக்ட்டர் டேக்கா கொடுத்ததால்தான் ஏ.சி சன்முகம் சரிவைச் சந்தித்தார் என்பதால் அவர் மனதில் உள்ளாட்சித் தேர்தல் உடன் படிக்கைதான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது.அதோடு தேமுதிகவிடம் ஆதரவு கேட்கப் போனவர்கள் கொண்டு வந்த செய்தியும் அதை உறுதிப்டுத்தி இருக்கிறது.

விஜயகாந்த் அப்படி என்ன கேட்டார் என்றுதானே சிந்திக்கிறீர்கள்.வருகிற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை அல்லது சேலம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் எதாவது ஒன்றை எங்களுக்குத் தரவேண்டும் என்கிறாராம் விஜயகாந்த்.அதனால் டாக்டரிடம் அப்பாயின் மெண்ட் கேட்டு ஜெயக்குமார் தலைமையில் ஒரு டீம் காத்திருக்கிறதாம்.

என்னதான் விஜயகாந்த் முன்பு ஜெயித்த தொகுதிக்கு பக்கத்து தொகுதிதான் விக்கிரவாண்டி என்றாலும் டாக்ட்ர் செல்வாக்கு அவருக்கு வருமா,அதனால சேலம் உங்களுக்குத்தான்,விக்கிரவாண்டிக்கு பிரச்சாரம் செய்ய நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று அழைக்கப் போகிறதாம் ஜெயக்குமார் அண்ட் டீம்.விஜயகாந்த் ஆரோக்கியமாக இல்லாததால் முன்னின்று அரசியல் செய்யும் பிரேமலதா என்கிற யானை,கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சிக்கு குழி தோண்டி விட்டது.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் குப்புறத்தள்ளி சமாதி கட்டிவிடும் என்று அதிமுகவில் மட்டுமல்ல தேமுதிகவிலும் பேசப்படுகிறது. டாக்ட்டரும் வராமல்,பிரேமலதாவும் கவிழ்த்தால் சிக்கலாகுமே என்று சிந்திக்கும் எடப்பாடியார் தேமுதிகவின் ஆதரவுக்கு வேறு 'என்ன ' எதிர் பார்க்கிறார்கள் என்றும் விசாரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.நாங்குநேரி தொகுதியில் ஒபிஎஸ் ஆள் ஜெயித்து இங்கே தனது கோஷ்டி ஆள் தோற்றுவிட்டால் மீண்டும் கட்சிக்குள் கலாட்டா வந்துவிடக் கூடாதே என்பதுதான் இப்போதைக்கு அவரது கவலை.