">

ரஜினி சார், ரசிகர்களுக்கும் கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பீங்களா..? சிக்கிடுச்சுப்பா பெருசு.

மிஸ்டர் க்ளீன் என்று ரஜினியைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் முடிப்பதற்கு பா.ஜ.க. அதிவேகம் காட்டி வருகிறது. அப்படி செய்யப்படும் முயற்சிகளே, ரஜினிக்கு ஆபத்தாக வந்துள்ளது.


ஆம், கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து, அந்த வட்டியை வாங்கியபிறகும் அதனை வருமானத்தில் காட்டாமல் மறைத்த விவகாரம் ஐ.டி. விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி, '2 கோடியே 63 லட்ச ரூபாய் கடன் கொடுத்து, அதற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி வசூலித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆனால், இப்படி பணம் பெற்றுக்கொண்டதை வெறும் 'கைமாற்றுக் கடன்'தான் என்று சொல்லியிருக்கிறார். அதாவது, வட்டித் தொழில் என்பது நகைக் கடன் சம்பந்தப்பட்டது மட்டும்தான் என்று நினைத்திருந்தாராம்.

ஆனால், ரஜினி வாங்கிய வட்டியைக் கணக்கிட்டால் அது 18% வருகிறது என்கிறார்கள். தான் சம்பாதித்த பணத்தை எப்படியேனும் செலவு செய்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சிஸ்டம் சரியில்லே என்று சொல்வதும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கள்ளப்பணம், கருப்புப் பணம் எல்லாம் குறைந்துவிடும் என்று சொன்னது ரஜினிதானே. ஆனால், அவரே கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதை மறைக்கிறார் என்றால், சிஸ்டம் எப்படியிருக்கு தலைவா..?