ரஜினியின் வலது கரம் இளவரசனை மிரட்டும் அமைச்சர் எம்சி சம்பத்! ரூ.100 கோடி சொத்து பின்னணி!

கண்ணில் தென்பட்டதை எல்லாம் வாங்கிப்போடுவதில் சசலா கில்லாடி.


அவர் விருப்பப்பட்ட இடங்களை யாரும் தரவில்லை என்றால் ஆட்களை வைத்து மிரட்டி, விரட்டுவார். அந்த பாணியில் அமைச்சர் சம்பத் இறங்கியிருப்பதும், அவர் ரஜினியின் நிர்வாகியின் மீதே கை வைத்திருப்பதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் மக்கள் மன்றத்தில் நிர்வாகியாக இருந்தவர் டாக்டர் இளவரசன். இவருடைய நிர்வாகத்தில், பெரியவடவாடி கிராமத்தில் செந்தில் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அமைச்சர் சம்பத்தின் அடியாட்கள் இவரது பள்ளிக்குள் நுழைந்து பூட்டை உடைத்து, பொருட்களை இழுத்து வெளியே போட்டு சதிராட்டம் ஆடிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

தகவல் அறிந்து இளவரசன் அவரது ஆதரவாளர்களுடன் அங்கு வர, சம்பத்தின் ஆட்கள் எச்சரிக்கை மட்டும் விடுத்து கிளம்பிவிட்டார்கள். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன இளவரசனுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் இன்று செய்தியாளர்களை சந்திதார் இளவரசன்.

‘‘நான் செந்தில் அறக்கட்டளை கல்வி குழுமத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடத்திவருகிறேன். பள்ளிக்கூடத்திற்கு 70 ஏக்கர் நிலம் மற்றும் 100 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன. இதனை அமைச்சர் சம்பத் விலைக்கு கேட்டார். நான் தருவதாக இல்லை என்று சொல்லிவிட்டேன்.

அதன்பிறகும் என்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். நான் திட்டவட்டமாக முடியாது என்றதும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மகள் திவ்யா, மகன் பிரவீன் ஆகியோர் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்...’’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்த பிரச்னையால் பள்ளிக்கூடம் நடைபெறாமல் இழுத்து மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பத் தரப்பில் பேசியபோது, ‘பள்ளிக்கூடத்தை விற்பனை செய்வதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டு, இப்போது மறுக்கிறார்’ என்று சொல்கிறார்கள். இந்த விவகாரம் இப்போது ரஜினி வசமும், எடப்பாடி வசமும் போய்விட்டது. இளவரசனை காப்பாற்ற ரஜினி வருவாரா அல்லது சம்பத்தை எடப்பாடி காப்பாற்றுவாரா?