விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. கூட்டணி முழுக்கமுழுக்க சி.வி.சண்முகத்தை மட்டுமே நம்பியுள்ளது.
விக்கிரவாண்டியில் தி.மு.க.வை தோற்கடிப்பாரா பொன்முடி? தி.மு.க.வில் செம மல்லுக்கட்டு!
ponஅதனால்தான் தங்கை மகன் இறந்த துக்கத்தைத் தூரவைத்துவிட்டு பிரசாரத்தில் இறங்கி கலக்கிக்கொண்டு இருக்கிறார். கூட்டணிக் கட்சிகள் கைவிட்டாலும், அ.தி.மு.க. பணபலத்தை நம்பி தைரியமாக இருக்கிறது.
ஆனால், தி.மு.க.வில் ஆரம்பம் முதலே ஏகப்பட்ட குழப்பம். வேட்பாளர் தேர்வும், தேர்தல் தொகுதி கண்காணிப்பும் பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் ஆரம்பத்தில் ஜோராக வேலையைத் தொடங்கினார்.
ஆனால், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரே போன் செய்து தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டதில் ஸ்டாலின் செம அப்செட். அதனால் ஜெகத்ரட்சகனை பொறுப்பாளராகப் போட்டார். வேகமாக களம் இறங்கிய ஜெகத்ரட்சகனை பா.ம.க. தரப்பினர் மடக்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஜெகத்தும் உள்ளடி வேலை பார்ப்பதாக தகவல் வரவே, வேறு வழியே இன்றி வேலுவை களம் இறக்கியிருக்கிறார் ஸ்டாலின். பண விவகாரத்தைக் கையாள்வதற்கு சரியான நபர் என்பதால் வேலு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பொன்முடி கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
வேட்பாளர் பொன்முடியின் தீவிர ஆதரவாளர் என்றாலும், சில உள்ளடி வேலைகள் செய்து தன்னை கட்டம் கட்டிய தி.மு.க.வை பொன்முடி பழி வாங்குவார் என்று சொல்லப்படுகிறது. அப்படித்தான் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்துவிடலாம்.