அரசியல் தலைவர்கள் ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பார்களா?

பொங்கல் வந்துவிட்டால் நம் அரசியல் தலைவர்கள் அனைவருமே ஆளுக்கொரு புகைப்படத்தைப் போட்டு அட்டகாசம் செய்கிறார்கள்.


அதாவது பொங்கல் பானையில் அரிசி போடுவது, பொங்கலைக் கிண்டிவிடுவது, பொங்கல் எடுத்து இலையில் பரிமாறுவது என்று ஆளாளுக்கு அட்டகாசமாக போஸ் கொடுத்து படம் போடுகிறார்கள்.

இந்த ஆண்டு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ் வரைக்கும் அத்தனை தலைவர்களும் பொங்கல் பானையில் கையை விடாத குறையாக காட்சி தருகிறார்கள்.

அதேபோன்று கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது என்றால், எடப்பாடி உடனே பேட் எடுத்து முதல் ஆளாக நிற்கிறார். ஜிம் திறந்துவைத்தால், அங்கே உட்கார்ந்து வெயிட்டை இழுத்து போஸ் கொடுக்கிறார். 

இப்படி எல்லா இடங்களிலும் திறந்துவைத்து, உடனே அதனுடனே நின்று போஸ் கொடுக்கும் நம் அமைச்சர்கள், ஏனோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் புத்திசாலித்தனமாக மேடை மீது அமர்ந்துகொள்கிறார்கள்.

மற்ற திறப்புவிழா போன்று, மாடுகளை விடும்போதும் நம் அமைச்சர் பெருமக்கள் களத்தில் இறங்கி முதல் மாட்டை மட்டும் பிடிக்க முயற்சி செய்யலாமே? அதைவிட்டு பொங்கல் பானையைக் கிண்டுவதுதான் வீரமா... சொல்லுங்க அமைச்சர்களே...