பன்னீர் முதல்வராவாரா..? எடப்பாடியை வளைத்துப்போட்ட துரைமுருகன்!

கிண்டல், கேலியாக பகடி பேசுவதில் துரைமுருகன் கில்லாடி. அவருடைய வாரிசாக மகனையும் அரசியலில் இறக்கிவிட்டதால் மனுஷன் இப்போ செம ஜாலியாகத் திரிகிறார்.


அதனால்தான் காங்கிரஸ்க்கு எங்கே வோட்டு இருக்கிறது என்று நக்கலாகக் கேட்டார். அந்த வகையில்தான் இன்று எடப்பாடிக்கு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். சமீபத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க.வில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியும். அது தி.மு.க.வில் முடியுமா? அ.தி.மு.க.வில் என்னைப் போல் ஆயிரம் பழனிசாமி வருவார்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய துரைமுருகன், ‘‘எடப்பாடி பேசுறது நல்லாத்தான் இருக்கு. வேற பழனிச்சாமிக்கு பதவியை கொடுக்க வேண்டாம். பதவிக்காக அலையும் பன்னீருக்கு முதல் அமைச்சர் பதவியைத் தருவாரா என்று கேட்டிருக்கிறார்.

இந்தப் பதில் சமூகவலைதளங்களில் படு ட்ரெண்டிங்க் ஆகிவருகிறது.