சிதம்பரம் தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்ததே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தைரியமாகப் பேசினார். இன்னும் ஒரு படி மேலே போய், அவர் பூமியில் இருப்பதே பாவம் என்றார். அதனால்தானோ என்னவோ இப்போது அவர் உள்ளே போய்விட்டார்.
ப.சிதம்பரத்துக்கு எதிராக வாதாட பணம் கொடுத்தால் ஏற்பாரா அவரது மனைவி நளினி?

இந்த நிலையில் சிதம்பரம் மீது மக்களுக்கு ஏன் வெறுப்பு அதிகம் என்று பலரிடம் கேட்டபோது, வித்தியாசமான ஒரு தகவல் சொன்னார்கள். ஆம், அது எல்லாமே சிதம்பரம் மீதான கோபம் அல்ல, அவர் மனைவி நளினி மீது மக்களுக்கு இருக்கும் கோபம் என்கிறார்கள்.
ஏனென்றால் தமிழக மக்களின் நன்மை பறிபோகிறது என்று தெரிந்தும் பணத்துக்காக நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். அதேபோன்று தமிழக இளைஞர்கள் அத்தனை பேரும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தெரிந்தபிறகும், பீட்டா அமைப்புக்காக வாதாடினார் நளினி சிதம்பரம்.
இதுதவிர விஷஆலையான ஸ்டெர்லைட், மோசடிநிறுவனமான சாரதா சிட்பண்ட், பாமரர் வயிற்றில் அடித்து பணம் பறிக்கும் லாட்டரி மாபியா மார்ட்டின் என்று, பணம் கிடைக்கிறது என்பதற்காக தமிழர் நலன் பார்க்காமல் வாதாடினார். அதனாதால் இன்று தமிழர்கள் யாரும் அவர்கள் பக்கத்தில் இல்லை.
இப்போதுகூட சிதம்பரத்துக்கு எதிராக ஆஜராக வேண்டும் என்று பணம் கொடுத்தால், பணத்தின் பக்கம் நிற்பார் என்று சொல்லும் அளவுக்கு ஆளாகியிருக்கிறார் நளினி சிதம்பரம். எப்போதும் மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இனியாவது சிதம்பரமும் நளினியும் புரிந்துகொண்டால் சரிதான்.