விடுதலை சிறுத்தைகளை உடைப்பாரா முருகன்..! இனியாவது தாமரை மலருமா..?

தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டைகிழிய கத்திக்கத்தி, அதற்கு சன்மானமாக தெலுங்கு கவர்னர் பதவியை வாங்கிவிட்டுப் போய்விட்டார் தமிழிசை சௌந்தர்ராஜன். அதற்குப் பின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து முருகனை தலைவராகப் போட்டிருக்கிறார்கள்.


பட்டியலினத்தவர் ஒருவரை தலைவராகப் போட்டுவிட்டதால், இனிமேல் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்களிடம் நல்ல செல்வாக்கு வந்துவிடுமாம். மேலும் பட்டியலின மக்களை எல்லாம் பா.ஜ.க.வுக்குக் கொண்டுவர பாடுபடுவாராம் முருகன்.

குறிப்பாக தி.மு.க. அணியில் அதிருப்தியுடன் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பா.ஜ.க. பக்கம் கொண்டுவரும் அசைன்மென்ட் இருக்கிறதாம். இதெல்லாம் நடக்கிற காரியமா? முருகனை யார் மதிக்கப் போகிறார்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் சிரிக்கிறார்கள்.

ஏனென்றால், முன்பு கிருபாநிதி தலைவராக இருந்தார். ஆனால் அது பெயரளவில்தான். அவர்பெயரை வைத்து இல. கணேசன்தான் அதிகாரம் செய்வார் அப்படி தான் இதுவும். இங்கே தலித் ஒருவரை தலைவர் ஆக்கினால்தான் அரசியல் செய்ய முடியும் என்று உணர்ந்து இருக்கிறார்கள் சங்கிகள். தலைவர் திருமாவளவன் அவர்களை சமாளிக்கவே இந்த முடிவாக இருக்கலாம். 

இனி, முருகன் பெயரில் பொன்னார் அட்டகாசம் அதிகரிக்கும் என்கிறார்கள். என்னடா இது, ஹெச்.ராஜாவுக்கு வந்த சோதனை.