பிரதமரிடம் என்ன கேட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..? பி.எம்.கேர்ஸ் நிதியைக் கொடுப்பாரா மோடி..?

நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. ஆனாலும், கொரோனா பரவல் இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது.


இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பல்வேறு மாநில முதல்வர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் மற்றும் தடுப்புப் பணிகள் தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் கொரோனா பணிகள் சிறப்பாக நடப்பதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்.

, “நிலுவையில் உள்ள ஏப்ரல் – ஜுன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். 

நெல்கொள்முதல் செய்ய வேண்டி 1321 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1000 கோடி ரூபாய் அளிக்க வேண்டுமெனவும், சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்க வேண்டும். நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இத்தனை கேட்டிருக்கிறார் முதல்வர், ஏதாவது கொடுப்பாரா மோடி..?