கோர்ட்டாவது மயி.... என்று சொன்ன ஹெச்.ராஜா மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா?

நெல்லை கண்ணன் பேசினால் கைது செய்யப்படுவார் ஆனால் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற பெரியவாள் பேசினால் இங்கு எதுவும் நடக்காது என்பதுதான் தமிழகத்தின் எழுதப்படாத சட்டம்.


ஆனாலும், சட்டம் எப்போதாவது தன்னுடைய கடமையை செய்யும் என்று உயர் நீதிமன்றக் கிளை உறுதி அளித்திருக்கிறது. ஆம், ஹெச்.ராஜா பேசிய விவகாரமான பேச்சுக்கு உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவு போட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். 

இதையடுத்து திருமயம் போலீசார் ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தன. ஆனாலும் காரணமே சொல்லாமல் அவர் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணையும், குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை

இந்த நிலையில் துரைசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வருடத்திற்கு மேலாககியும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? இன்னும் இரண்டு மாதத்திற்குள் கீழமை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

இது நடக்குமா என்று பார்க்கலாம்.