கைது செய்யப்படுவாரா ஜோயல்? ஸ்டாலின் கப்சிப்!

தி.மு.க.வுக்கும் நிலத்தகராறுக்கும் ஏகப் பொருத்தம். நிலம் தொடர்பான ஏதாவது ஒரு சண்டை, தகராறு என்று இருந்தால், அங்கே நிச்சயம் ஒரு தி.மு.க. புள்ளி இருப்பார்.


அந்த வகையில் இப்போது ஹாட் தகவல் ஜோயல் மீது சொல்லப்படும் நிலப்பிரச்னைதான். நீலாங்கரையில் சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான இடத்துக்கு புரோக்கராக செயல்பட்டாராம் தி.மு.க.வின் ஜோயல். ஆனால், அவருக்கு கமிஷன் கொடுக்கப்படாமல் பதிவு வரைக்கும் போகவே, உள்ளே புகுந்து தடுத்து உயிருக்கு மிரட்டல் விட்டாராம்.

ஆனால், அந்த இடம் உண்மையில் வேறு ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது என்பதால், கேஸ் பதியாமல் பிரச்னையை முடிக்க கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். உடனே ஜோயலை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடலாம், இல்லையென்றால் நமக்கு அசிங்கமாகிவிடும் என்று ஸ்டாலினிடம் நிர்வாகிகள் சிலர் கோரிக்கை வைத்தார்களாம்.

இதுக்கெல்லாம் கட்சியை விட்டு நீக்குறதுன்னா, பாதிப் பேரை நீக்கியாகணும், கைது வரைக்கும் போனால் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகிவிட்டாராம். ஜோயலுக்கு நல்ல நேரம்தான்.