தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப் போகிறாரா கௌதமன்? ரோட்டை பத்திரமா வைச்சுக்கோங்க.

ஒரு வழியாக தஞ்சை பெருவுடையார் கோவிலில் சமஸ்கிருதத்துடன் சேர்ந்து தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துவிட்டது.


ஆனால், தமிழில் மட்டுமே குடமுழக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் இயக்குனர் கௌதமன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை வைத்ததுடன், இளைஞர்களை தஞ்சைக்கு போராட அழைத்துள்ளார். இது குறித்து அவர் இன்று பேசியபோது, ‘‘தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழக்கு நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் ஒருமித்து கோரி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சமஸ்கிருதத்திலும் குடமுழக்கு செய்யலாம் என்று அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. 

மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட பதிலின் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழக்கு செய்யலாம் என அறிவித்திருக்கிறது. எனவே சம்மந்தமே இல்லாத சமஸ்கிருதம் எங்களுக்கு தேவையில்லை. எனவே இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். 

குறிப்பாக வருகின்ற 5 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்வில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் போது ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பை தெரிவிப்போம். எனவே ஜல்லிகட்டுக்காக ஒட்டுமொத்த தமிழர்கள் அணிதிரண்டதுப்போன்று 5ம் தேதி தமிழர்கள் அனைவரும் தஞ்சை பெருவுடையார் கோவிலில் அணிதிரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

தஞ்சாவூருக்கு ஒரு பூட்டு போடுங்க கௌதமன். என்று அவர் கேட்டுக்கொண்டார்.