எடப்பாடியார் அடுத்து நீட் தேர்வை ரத்து செய்தால் ஜெயலலிதா ஆகிவிடலாம்! வழி காட்டும் காங்கிரஸ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டு மக்களை பரவசப்படுத்தியது போன்று, எடப்பாடியார் நீட் தேர்வையும் ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த ஜி.கே.முரளீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இரண்டு தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் மூலம் மத்திய அரசின் முட்டாள் தனக் கொள்கையான 5 மற்றும் 8 ஆம் வகுப்பு சிறு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு வைத்து அவர்களை கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் உதவாக்கரை திட்டத்தை தமிழ்நாட்டரசு ஏற்காது

பள்ளிச்சிறுவர்களின் சுமையை கருத்தில்கொண்டு 5மற்றும் 8வது பொதுத்தேர்வை நடத்த முடியாது என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தீர்கள். மகிழ்ந்தோம். இன்று காவிரி டெல்டா மாவட்டங்களை பசுமைப்பிரதேசமாக, வேளாண்மண்டலமாக அறிவித்து. இனி பூமியைத் தோண்டிப் புதையலைப் பிடுங்கும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் போன்ற எந்தக் கணிம திருட்டையும் அனுமதிக்க முடியாது என ஆண்மையோடு அறிவித்து...

சர்வதேச அளவில் விவசாயத்தை சீரழித்து தமிழகத்தின் பெருமையை சூறையாடவந்த பெருந்திருடர்களை அனுமதிக்க மாட்டோம் அடித்து விரட்டுவோம் என்று சொல்லி பா.ஜ.க.வின் அகோரப்பசிக்கு ஆப்படித்து தமிழகத்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்த்துவிட்டீர்கள். அதே போல இந்த நீட் தேர்வும் நம் தமிழகத்திற்கு தேவையில்லாதது... திட்டம் போட்டு தமிழக மாணவர்களின் அறிவுச்சுடரை அணைக்க வேண்டும் என்ற வடவர்களின் வயிற்றெரிச்சலில் வார்த்தெடுக்கப்பட்து தான் நீட் தேர்வு என்பதை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்...

எனவே தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வும் விரட்டியடிக்கப்பட்டு பழைய முறையிலேயே மருத்துவமாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் சூட்டோடு சூடாக அறிவித்துவிடுங்கள். மக்கள் ஜெயலலிதா போன்று உங்களை பாராட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அறிவிப்பாரா முதல்வர்?