அரதப்பழசான தி.மு.க.வை டிஜிட்டல் தி.மு.க.வாக மாற்றியவர் சுனில். இவர் அரசியல் புரோக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் டீமில் பணியாற்றியவர்.
தி.மு.க.வின் சுனில் ரஜினியிடம் செல்கிறாரா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!
திடீரென சுனில் தி.மு.க.வின் ஐ.டி. டீம் என கருதப்படும் ஓ.எம்.ஜி.யில் இருந்து வெளியேறி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலின் போது கொண்டாடப்பட்ட சுனில், அடுத்த சட்டசபை இடைத்தேர்தல் தோல்விக்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால், வன்னியர்களை மட்டும் அரவணைத்தால் போதும் என்று சுனில் சொல்லிக்கொடுத்த படிதான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு என்று வாக்குக் கொடுத்தாராம் ஸ்டாலின்.
ஆனால், அதுதான் இடைத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு சுனில் செயல்பாடு போதாது என்று சபரீசனும், உதயநிதியும் கருதினார்களாம். அதனால் வேறு ஒரு தலைமையின் கீழ் உழைக்க வேண்டும் என்று சுனிலுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும், ஓ.எம்.ஜி. டீம் ஆட்கள் தி.மு.க. நிர்வாகிகளுக்கு போன் செய்து மிரட்டி பணம் சம்பாதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் சுனில் தானே தி.மு.க. கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் சுனில் ரஜினிக்குப் பணியாற்றுவதற்காகத்தான் தி.மு.க.வில் இருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர் ரஜினியை சந்தித்துவிட்டுப் போயிருக்கிறார். அப்போதே, தமிழகம் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் வேண்டும் என்று சொன்னதாகவும், அவருக்காகவே சுனிலை பிரசாந்த் கிஷோர் அழைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் ஏற்கெனவே பிரசாந்த் கிஷோரிடம் வேலை செய்தவர்தான் சுனில். ஜனவரி 1ம் தேதி முதல் சுனில் ரஜினியிடம் செல்வதாக இப்போதைய தகவல்.