வயிற்றில் கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு வழமையான உணவுகள் பிடிப்பது இல்லை. அதனால் பலரும் நொறுக்குத் தீனி எடுத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். கர்ப்பிணிகள் நொறுக்கித் தீனி உட்கொண்டால், அது குழந்தையைப் பாதிக்கிறது என்று லண்டன் ராயல் மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து உள்ளார்கள்.
கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?
கர்ப்பிணிகள் மட்டுமின்றி பால் கொடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட்டால், அது குழந்தையின் ஜீரண உறுப்புகளைப் பாதிப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனி மற்றும் பாடம் செய்யப்பட்டவைகளை சாப்பிடுவதன் காரணமாக குழாந்தைகளுக்கு உள் உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு இரண்டாம் நிலை நிரீழிவு நோய் உண்டாகவும் நொறுக்குத் தீனி காரணமாக அமைகிறது. கர்ப்பிணிகளும் தாய்ப் பால் குடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட ஏங்கினால், வீட்டிலேயே தயார் செய்து உண்ண வேண்டுமே தவிர டின்களில் மற்றும் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் பொருட்களை உண்ணவே கூடாது. குழந்தை பிறக்கும் முன்னரே அதற்கு நோயை பரிசளிக்க வேண்டாமே.