தோனி இன்று களமிறங்குவாரா? CSK கோச் ஸ்டீபன் பிளெமிங் தகவல்!

இன்று ipl ல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.


முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மாலை 4 மணிக்கு ராஜிவ் காந்தி மைதானத்தில் தொடங்கவுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இது வரை விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில்  உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

கடைசி போட்டியில் இடம் பெறாத தோனி , நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். காயம் காரணமாக 2 வாரமாக விளையாடாமல் இருக்கும் பிராவோவும் நேற்று பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். தோனி  மற்றும்  பிராவோ இருவரும் இந்த போட்டியில் விளையடுவார்களா இல்லையா என்பது இன்று மாலை அவர்களின் உடல்  தகுதியை வைத்தே முடிவு செய்யப்படும் என ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பொறுத்தவரை டேல் ஸ்டெய்ன் அணியில் இணைந்தது அந்த அணிக்கு கூடுதல் பலத்தினை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.