ரஜினியை அசால்ட் செய்து முதல் இடத்துக்கு முன்னேறிய தளபதி! தல 5வது இடத்துக்கு தள்ளப்பட்ட பரிதாபம்!

சென்ற வருடம் விக்கிபீடியா பக்கத்தில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


குறிப்பாக விக்கிபீடியா பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். கிட்ட தட்ட ரஜினி, கமல் ஹாசனை மிஞ்சி விட்டார் என கூட சொல்லலாம்.

அதனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு பெரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் விஜய். ரஜினி கமல் ஹாசன் விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஜய் சேதுபதி என ஒவ்வொரு நடிகரும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளனர்.

குறிப்பாக மாஸ் ஹீரோக்களில் விஜய், அஜித் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரண்டு மாஸ் ஹீரோக்களுக்கு இடையிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ற வருடம் விக்கிபீடியா பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மொத்தம் 24 லட்சம் முறை தளபதி விஜயின் விக்கிபீடியா பக்கத்தை ரசிகர்கள் தேடியுள்ளனர். அதற்கு பின்னதாக தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே வருகிறார். அவரது பக்கத்தை 23 லட்சம் ரசிகர்கள் தேடியுள்ளனர். தளபதி விஜயின் போட்டியாளர் என்று கூறப்படும் தல அஜித்குமார் விக்கிபீடியா பக்கத்தை வெறும் 16 லட்சம் மட்டுமே தேடியுள்ளனர். இதன் மூலம் அவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.