ஒடிசா மாநிலத்தில் திருமணமாகி 2 மாதத்தில் மனைவி காணாமல் போன நிலையில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரது கணவனை கைது செய்தனர். இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
7 வருடங்களுக்கு முன்பு கணவனால் எரித்துக் கொல்லப்பட்ட மனைவி! கள்ளக்காதலனுடன் தற்போது திரும்பி வந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபயா சுதார் இவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு இதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்ற நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவரது மனைவி திடீரென மாயமாகியுள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் தேடியும் கிடைக்காத நிலையில் அபயா காவல் நிலையத்தை நாடியுள்ளார். தனது மனைவியை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஒரு மாதம் கழித்து இதிஸ்ரீயின் தந்தை காவல் நிலையத்தில் அபயா மீது தனது மகளை வரதட்சணை கொடுமை கேட்டு கொலை செய்துவிட்டதாக வழக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த வழக்கின் பேரில் அபயா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த அவர் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக தனது மனைவியை தனிமையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் இதையடுத்து சில மாதங்கள் தேடி ஓய்ந்து போன நிலையில் அவரது மனைவியின் நண்பர்கள் மற்றும் அவளது முன்னாள் காதல் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
அவரது முயற்சியின் பயனாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் இதிஸ்ரீ தனது காதலன் ராஜீவ் என்பவருடன் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் பேரில் அபயா போலீசாரின் உதவியுடன் அவர்களை கண்டுபிடிக்க சென்றுள்ளார் அப்போது அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது தனது பெற்றோர் தனக்கு விருப்பமில்லாதவருடன் திருமணம் செய்து வைத்ததாக இதிஸ்ரீ தெரிவித்துள்ளார்.இதையடுத்து தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அபயா அதிர்ந்து போயுள்ளார். இந்நிலையில் அவர் மீது தவறான குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால் அபயா மீதுள்ள வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக குஜராத்தில் வசித்து வந்த தம்பதி தங்களது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக ஒடிசா வந்ததால் கையும் களவுமாக மாட்டி கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.