காரில் கணவருக்காக தனிமையில் காத்திருந்த மனைவி! நொடியில் நேர்ந்த பயங்கரம்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

டெல்லியில் காரில் தனிமையில் இருந்த பெண்ணை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியைச் சேர்ந்த உஷா என்பவர் தனது கணவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்பதற்காக காலை 6:30 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து சிறிது தூரம் சென்ற நிலையில் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கணவர் கீழே இறங்கி கோவிலுக்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில் உஷா மட்டும் காரில் தனிமையில் தனது கணவனுக்காக காத்திருந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென காரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பதறியடித்துக்கொண்டு காரின் கதவைத் திறந்த உஷாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் இந்த பதிவானது அங்குள்ள அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து வெளியில் சத்தம் கேட்ட நிலையில் கோவிலில் இருந்து அவரது கணவர் வெளியே வந்து பார்த்தபோது உஷா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கான காரணம் முன் பகையாக இருக்கலாம் என்பது குறித்து அவரது கணவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டப்பகலில் இந்த மாதிரியான சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.