21 வயது நபருடன் 26 வயது அஸ்வினிக்கு தகாத உறவு..! கண்டுபிடித்த கணவனுக்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட பயங்கரம்! அரக்கோணம் திகுதிகு!

கள்ளக் காதலை கண்டித்த கணவனை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருத்தணிக்கு மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் கைனூர் ரயில் கேட்டில் திடீரென தவறி விழுந்தார். ரயில் மிகவும் மெதுவாக சென்றதால் சிறு காயங்களுடன் மயங்கி விழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்த ராஜேந்திரன் அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் போலீசுக்கு புகார் தந்த ராஜேந்திரன் ரயிலில் இருந்து தவறி விழவில்லை எனவும் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்தவர் உள்பட 4 பேர் தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அனுரகுவம்சி என்பவருடன் ஏற்பட்ட தொடர்பை கண்டித்ததால் கணவரை கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். 

மெக்கானிக்காக இருக்கும் ராஜேந்திரனின் மனைவி அஸ்வினி. இவர்களுக்க 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அஸ்வினியின் தாய்வீடு சென்னை செம்பியத்தில் உள்ளது அங்கு அனுரகுவம்சி என்பவருடன் அஸ்வினிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்க உல்லாசமாக இருந்து வந்தது தெரியவர கணவர் அஸ்வினியை கண்டித்துள்ளார். இதனால் தகராறு ஏற்பட கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் அஸ்வினி. ஆனாலும் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் தந்த புகார்கள் செம்பியம் மற்றும் ஆவடி போலீஸ் நிலையங்களில் உள்ளது.

இந்நிலையில் கணவரை தீர்த்துக்க கட்ட அஸ்வினி திட்டம்போட கள்ளக்காதலன் அனுரகுவம்சி, அவரது தம்பி கமலேஸ்வரன், நண்பர் தினேஷ் ஆகியோர் கடந்த 30ம் தேதி ராஜேந்திரனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக ரயில் மெதுவாக சென்றதால் உயிர் பிழைத்தார். அதே ரயிலில் கணவர் விழுந்து இறப்பதை பார்த்து ரசிக்க அஸ்வினியும் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வினி, அனுரகுவம்சி, கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.