நீ கவர்ச்சியாக இல்லை! கணவன் கூறிய ஒரே வார்த்தை! திருமணமான 15வது நாளில் மனைவி எடுத்த பகீர் முடிவு!

திருமணமான 15 நாட்களில் கணவரின் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் கணபதிபட்டியைச் சேர்ந்த மலர் என்ற பெண்ணுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கல்லம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே மலரின் உடல் மற்றும் நிறம் குறித்து தரக்குறைவாக பேசி கொடுமை செய்திருக்கிறார் சுப்ரமணியன்.

இதனை மலர் தனது தந்தையிடம் தொலைபேசியில் வேதனையாக தெரிவித்திருக்கிறார். மேலும் கொடுமை தாங்க முடியாததால், நேரில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். 

இதனையடுத்து மலரின் தந்தை தங்கையா கல்லம்பட்டிக்குச்சென்று மலரை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். கணபதி பட்டியில் இருந்த மலர் தனது தற்கொலைக்கு கணவர் சுப்பிரமணியன் செய்த கொடுமையே காரணம் என எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மலர் தற்கொலை கடிதத்தை புகாராக எடுத்துக்கொண்டு சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனை தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் நேரடியாக விசாரித்து வருகிறார்.