நண்பனின் மனைவிக்கு ராங் கால்! பிறகு மணிக்கணக்கில் பேச்சு! கண்டுபிடித்த பிறகு ஏற்பட்ட விபரீதம்!

பெங்களூரில் போனில் நீண்ட நேரம் பேசியதன் காரணமாக சொந்த நண்பனையே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வடமாநிலத்தை சேர்ந்த முனின் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் தங்கி வெல்டிங் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் வட மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நபரான பஸ்வான் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் , பஸ்வான்  முனினின் மனைவி நம்பரை அவருக்கு தெரியாமல் போனிலிருந்து எடுத்துள்ளார். மேலும் அவரிடம் மணிக்கணக்கில் பேசியும் வந்துள்ளார். இந்த தகவலானது முனின் காதுக்கு செல்ல ஏன் என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாய் என்று பஸ்வானிடம் கோபத்துடன் கேட்டார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஆத்திரம் அடைந்த முனின் பஸ்வானை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கர்நாடக காவல்துறையினர் பெங்களூர் பகுதியில் உள்ள gigaani என்னும் இடத்தில் பதுங்கி இருந்த முனினை கைது செய்தனர். இதனை தொடர்ந்து முனினிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.