என் புருசனுக்கு தெரிஞ்சிடிச்சி..! கள்க்காதலனை கழட்டிவிட்ட 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த பயங்கரம்! தூத்துக்குடி திகுதிகு!

தூத்துக்குடியில் கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு, கள்ளக்காதலுனும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


நெல்லை மாவட்டம் துலுக்கர்குளத்தை சேர்ந்த ரமேஷ்பாபு இரும்புக் கம்பெனியில் தொழிலாளி. அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதியும் வேலை பார்த்துவருகிறார். ரமேஷ்பாபுவும் பகவதியும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்குமிடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. 

இருவருக்குமிடையேயான நெருக்கம் பகவதியின் கணவர் முருகனுக்குத் தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வேலைக்குப் போக வேண்டாம்' என முருகன் சொன்னதால் கடந்த ஒரு மாதமாக வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் பகவதி.

இந்நிலையில் இனியாவது திருந்தி வாழலாம் என நினைத்த பகவதி ரமேஷ்பாபுவுடன்ன தொடர்பை துண்டித்துள்ளார். இது ரமேஷ் பாபுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரமேஷ்பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தன்னை பிடிக்க வருவதை பார்த்த ரமேஷ்பாபுவை ஓடிச்சென்று வயல்வெளிக்குள் புகுந்தார். பின்னர் அதே கத்தியில் தானும் கத்தியால் கழுத்தறுத்துக் கொண்டார். பின்னர் மயங்கி விழுந்த அவரையும், அவரால் தாக்கப்பட்ட பகவதியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்பாபு உயிரிழந்தார். பகவதியை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.