கணவர் இல்லாமல் தனிமை! ஊட்டி உமா எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் சம்பவம்!

ஊட்டி: கணவரை பிரிந்து தனிமையில் வாடியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஊட்டி, நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் உமா (43 வயது). இவரது கணவர் பசவராஜ். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ நேரிட்டது. இதனால், உமா மட்டும் தனது மகன்களை பராமரித்து வந்துள்ளார். அவரது 2 மகன்களும் வேலைக்குச் செல்கின்றனர். இந்நிலையில், 2 நாள் முன்பாக, வீட்டில் யாருமில்லாத நிலையில், திடீரென உமா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். 

வேலைக்குச் சென்றுவிட்டு முதலில் வீடு திரும்பிய அவரது இளைய மகன் அபிஷேக் இதைப் பார்த்ததும்  அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பேரில், உடனடியாக, ஊட்டி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த பயனும் இல்லை.

பின்னர், கிச்சன், பெட்ரூம் என எல்லா இடத்திலும் ரத்தக்கறை இருந்த காரணத்தால், இது ஒருவேளை தற்கொலை முயற்சியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, உமா எழுதி வைத்த தற்கொலை கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், கணவரை பிரிந்து தனிமையில் வாழ்வது எனக்கு வேதனையாக உள்ளது. இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். எனது மகன்களை உறவினர்கள் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என உமா எழுதியுள்ளார். 

இதையடுத்து, மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் வழக்கை முடித்துள்ளனர்.  இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.