என் கணவர் எவ்வளவோ சொன்னார்..! என்னால அந்த பழக்கத்த நிறுத்த முடியல..! புதுச்சேரி பெண்மணி எடுத்த பகீர் முடிவு!

புதுவையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மனைவியை கணவன் கண்டித்ததால், மனம் உடைந்து மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


புதுவையில் வசித்து வருபவர் குருநாதன். இவரது மனைவி தாரா. இருவருக்கும் நீண்டகாலமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. வயது முதிர்ச்சி காரணமாக கணவன் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான மனைவியால் இதனை நிறுத்த முடியவில்லை. 

இதனை தொடர்ந்து கணவர் குருநாதன் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தாரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதைக்கண்ட கணவர் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தாராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.