கணவன் கேட்ட ஒரே வார்த்தை! கொதிக்க கொதிக்க எண்ணெய்யை தூக்கி ஊற்றி மனைவி செய்த படு பயங்கர சம்பவம்! துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!

சென்னையில் கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி மனைவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


சென்னை திரு.வி.க நகரில் உபயதுல்லா, நஸ்ரின் தம்பதி வசித்து வருகின்றனர். 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது குடும்பத் தகராற ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2ம் தேதியும் வழக்கம் போல் வீட்டில் சண்டை நடைபெற ஆத்திரம் அடைந்த மனைவி நஸ்ரின் அடுப்பில் சமையலுக்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து வந்த கணவர் உபயதுல்லா மீது ஊற்றினார். மனைவியின் செயலை சற்றும் எதிர்பாராத கணவர் மீது வலி தாங்க முடியாமல் அவரது அலறி துடித்தார்.

அவரின் மரண ஒலம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடல் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந் உபயதுல்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நஸ்ரினை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உபயதுல்லா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.