சாப்பாட்டில் ருசி இல்லை என்ற புருசன்! கரண்டியால் சாத்தி விரட்டிய மனைவி!

உணவை ருசியாக சமைக்கவில்லை என்று கூறிய கணவனை கரண்டியால் அடித்து மனைவி விரட்டியுள்ளார்.


சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பொன்னுவேல் புரத்தில் கட்டிட மேஸ்திரியாக இருப்பவர் கார்த்தி. இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொன்னுவேல் புரத்தில் தனலட்சுமியின் சித்தி ஒரு பழக்கடை வைத்துள்ளார். அந்த பழக்கடைக்கு சென்று கதை பேசுவது தனலட்சுமியின் வாடிக்கை. இதனால் வீட்டில் ஒழுங்காக சமைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கடுப்பான கணவன் கார்த்தி உணவில் தற்போது ருசி இருப்பதில்லை என்றும் ஒழுங்காக சமைக்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி கணவன் கார்த்தியுடன் சண்டையிட்டுள்ளார்.

அப்போது தனலட்சுமியின் பழக்கடை சித்தியும் அங்கு வந்துள்ளார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட தனலட்சுமி வீட்டில் இருந்த கரண்டியை எடுத்து கணவனை வெளுத்துள்ளார். 

வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டே கணவன் கார்த்தி ஓடியுள்ளார். மேலும் அயனாவரம் காவல் நிலையத்திலும் தனது மனைவி தன்னை கரண்டியால் அடித்து விரட்டியாக புகாரும் அளித்தார். இதன் அடிப்படையில் தனலட்சுமி மற்றும் அவரது சித்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.