நள்ளிரவில் கணவன் இருக்கும் போதே காதலனுக்கு வீட்டுக் கதவை திறந்து விட்ட மனைவி! பிறகு அரங்கேறிய திக் திகில் சம்பவம்!

கள்ளக் காதல் விவகாரத்தில் கணவனை மரணமேடைக்கு அனுப்பிவிட்டு விபத்து போல் நாடகம் ஆடிய பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


பீகாரை சேர்ந்த நிர்மல்குமார் டைமண்ட் ஹார்பர் ரயில் நிலைய மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்க வங்கத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 

கடந்த 10ம் தேதி காவல்துறைக்கு தகவல் அளித்த சோனாலி தன்னுடைய கணவர் கால்வாயில் சடலமாக கிடப்பதாக கூறினார். இதையடுத்து நிர்மல் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் போதையில் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் போலீசாரிடம் சோனாலி தெரிவித்திருந்தார்

ஆனால் நிர்மல் குமாரின் உடலை பிரதே பரிசோதனை செய்ததில் அவர் நைலான் கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து நிர்மல் வீட்டில் நைலான் கயிறு ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

வழக்கில் நிர்மலின் மனைவி சோனாலி முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்து வந்ததால் காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சோனாலியின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்தனர். அவர் அடிக்கடி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நண்பருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதுகுறித்து முதலில் மழுப்பலான பதில் அளித்த சோனாலி பின்னர் ஆண் நண்பர் ஜமீலுடன் சேர்த்து நிர்மலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ``சோனாலி, ஜமீல் இருவரும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு சோனாலி குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரின் விருப்பத்திற்கு மாறாக நிர்மல் குமாருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் ஜமீலுடன் பழகுவதை நிறுத்தவில்லை.

திடீரென ஒரு நாள் மனைவி மீது சந்தேகம் அடைந்த நிர்மல்குமார் அவர் காதலன் ஜமீலுடன் நெருங்கிப் பழகுவதை கண்டுபிடித்து கண்டித்தள்ளார். இதையடுத்து காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார். நவம்பர் 10-ம் தேதி இரவில் நிர்மல் தூங்கியவுடன் ஜமீலுக்கு போன் செய்து வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். அதன்பின் இருவரும் சேர்ந்து நிர்மல் குமாரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர்.

உடலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர். நிர்மல் குமாரின் மரணத்தை விபத்துபோல நம்ப வைத்தவிட்டு இருவரும் அபுதாபியில் செட்டிலாக முடிவு செய்திருந்தனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பெல்லாம் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமணம் செயது வைத்தால் காதலனுடன் ஓடிபோவார்கள். ஆனால் இப்போது கணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.