கேரளாவில் கணவனைக் கொன்று விட்டு விடுதி மேலாளர் உடன் தப்பிச் சென்ற பெண் மற்றும் மேலாளரை போலீசார் வலைவீசி தேடிக் கொண்டிருகின்றனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து முதலில் கணவன்.. இப்போது மகன்..! ஒரு மாநிலத்தையே உலுக்கும் லிசி..!
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் ரிஜோஸ். இவருக்கு லிசி என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ரிஜோஸ் வீட்டின் அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ரிஜோஸ் இம்மாதம் 3ம் தேதி முதல் காணவில்லை. அதேபோல் விடுதி மேலாளர் வசீம் மற்றும் ரிஜோஸ் மனைவி லிசி இருவரையும் 4ம் தேதி முதல் காணவில்லை. சந்தேகம் அடைந்த ரிஜோஸ் உறவினர்கள் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளித்தனர்.
சந்தேகத்தின் பேரில் விசாரித்த காவல்துறையினர் தனியார் விடுதியில் மோப்பநாய் விட்டு சோதனை நடத்தினர். அப்போது விடுதி பின்புறம் புதிதாக குழிதோண்டி மூடி இருப்பது தெரியவந்தது. அதை தோண்டிப் பார்க்கையில், பாதி எரிந்த நிலையில் ரிஜோஸ் சடலம் கிடைத்துள்ளது.
இதற்கிடையே, வசீம் மற்றும் லிசி இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதும், இதற்கு இடையூறாக இருந்த ரிஜோஸை கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் உறுதியானது.
இருவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.