2வது திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கணவரே கொன்றுவிட்டதாக உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
நீ செத்தால் தான் நான் அவளை கல்யாணம் செய்ய முடியும்! கணவன் கூறிய ஒரு வார்த்தை! மனைவி எடுத்த விபரீத முடிவு! நாகர்கோவில் அதிர்ச்சி!
நாகர்கோவில் பழவிளை இலங்கை அகதிகள் முகாமில் ஜோன்ஜீனத், இந்துராணி தம்பதி வசித்து வந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 வயதில் நித்தின்ஜோ என்ற ஆண் குழந்தை உள்ளது.
ஜீனத் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது மட்டும் இன்றி மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் கணவர் திருந்தாததால் மனவேதனை அடைந்த இந்துராணி வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்ட தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்துராணியின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். இந்துராணியில் சாவில் மர்மம் இருப்பதாகவும், 2வது திருமணம் செய்து கொள்வதற்காக கணவரே அடித்துக் கொன்றிருக்கலாம் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் எங்களுடைய மனுவை கிழித்து போட்டதும் இன்றி மிரட்டி எழுதி வாங்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டினர். என இந்துராணி மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிக்கு தண்டனை தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.