மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தனது மகளுடன் தவறான உறவு வைத்திருந்த தனது இரண்டாவது கணவனை மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
திருமணமான மகளுடன் தந்தைக்கு தகாத உறவு! கண்டுபிடித்த தாய் அரங்கேற்றிய கொடூரம்! பைனான்சியல் கொலையில் அதிரடி திருப்பம்!
அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வந்த பைனான்சியர் இளங்கோவன், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வெளியே வைத்து ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர் அப்போது பலத்த காயத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டுவது போன்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இளங்கோவனின் முதல் மனைவி இறந்து போன நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடிய அபிராமியை, இளங்கோவன் 4 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவிடம் தகாத உறவில் இளங்கோவன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அனுசுயா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு சென்று விட்டார். ஆனால், அனுசுயா இருக்கும் இடத்தை அறிந்து மீண்டும் இளங்கோவன் அங்கு சென்று அவரிடம் பாலியல் உறவில் ஈடுபட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இது பற்றி தனது தாயார் அபிராமியிடம் அனுசுயா அழுது புலம்பி இருக்கிறார். இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு தாயும், மகளும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபிராபி அவரது மகள் அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.