ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியுடன் மனைவிக்கு தகாத உறவு! கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து மனைவி கணவனைக் கொன்று முகத்தைச் சிதைத்த நிலையில் டெய்லர் குறியீட்டைக் கொண்டு போலீசார் கொலையாளிகளைக் கண்டுபிடித்தனர்.


கர்நாடகாவின் உஜ்ஜயினியை அடுத்த தொட்டபல்லாபுரா வனப் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் சிக்கியது இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார் என்றும் கொலை செய்தவர்கள் யார் என்றும் தெரியாமல் விழி பிதுங்கினர். 

இந்நிலையில் சடலத்தின் சட்டையை ஆய்வு செய்த போலிசார் காலரில் இருந்த டெயலர் குறியீட்டைக் கொண்டு பல்வேறு டெய்லர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்த நபர் கொடிகஹள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் பிளம்பர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அங்கு இருந்த அவரது செல்ஃபோனை ஆய்வு செய்த போது அவர் இறப்பதற்கு முன் தனது மனைவியிடமே பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அவரது மனைவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியே வந்தன. இறந்தவரின் மனைவிக்கு வேறு ஒரு நபர் மற்றும் அந்த நபரின் சகோதரருடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதனால் கணவன் - மனைவிக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து கள்ளக்காதலர்களான ஒருவன்,  அவனது சகோதரன் ஆகியோர் உதவியுடன் மனைவி கணவனைக் கொல்லத் திட்டமிட்டாள். 

திட்டப்படி மனைவி ஒரு இடத்துக்கு கணவனை விருந்துக்கு அழைக்க அதனை நம்பிச் சென்ற கணவனை கள்ளக்காதலனும், அவனது சகோதரனும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தையும் சிதைத்து வனத்தில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.