கணவனை ஆட்டுக்கறி வாங்க அனுப்பிவிட்டு காதலனை வீட்டுக்கு வரவழைத்த மனைவி! பிறகு நேர்ந்த பயங்கரம்!

தெலுங்கானாவில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய மனைவி சிக்கினார்.


தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் அடுத்த தண்டா பகுதியில் நவீன் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷுடன் 2 ஆண்டுகளாக நவீனுடைய மனைவிக்கு கள்ளக் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவியுடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்த வெங்கடேஷ் குறித்து தெரிந்து கொண்ட நவீன் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். 

இதை அடுத்து கள்ளக் காதலன் வெங்கடேசனுடன் சேர்ந்து திட்டமிட்ட அந்த பெண் கணவனை கறி வாங்கி வருமாறு மார்க்கெட் போகச் சொன்னார். அதே சமயத்தில் வெங்கடேசனை வரவைழத்து தன்னுடைய கணவர் வெளியில் வருகிறார். போட்டுத் தள்ளிவிடு என கூறியுள்ளார். 

வீட்டை விட்டு வெளியில் வந்த நவீனை இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்தார் வெங்கடேசன். இதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து நவீன் விபத்தில் இறந்தது போல் ஒரு செட்டப் செய்து நாடகம் ஆடியுள்ளனர். இவை அனைத்தும் மனைவியிடம் போலீஸ் துருவி துருவி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மனைவியுடன் மாமிசம் சாப்பிடலாம் என வீட்டை வீட்டு வெளியில் வந்த கணவர் பரலோகத்துக்கு அனுப்பி வைத்தார் மனைவி. தற்போது கள்ளக் காதலனுடனும் வாழ முடியாமல் சிறையில் “கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க... தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ” என தெலுங்கில் பாடி வருகிறார் மனைவி... நாமும் கேட்போம் அவர்களின் சோகக் கீதத்தை...