கணவனுக்கு பாலில் மயக்க மருந்து! மனைவி கள்ள்க்காதலனுடன் சேர்ந்து செய்த சம்பவம்! அதிர்ந்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய மனைவியையும் அவரது கள்ளக் காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பொதிகை மலை பகுதியில் வசிப்பவர் முருகேசன். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும் 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். முருகேசன் வேலைக்கு சென்றுவிடுவார்.அப்போது பிரியா வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் மல்லூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அது கள்ளக்காதலாக மாறியது.இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தன் கணவர் முருகேசனுக்கு தெரிய வரவே அவர் இதை கண்டித்து உள்ளார். இதுகுறித்து பலமுறை பிரியாவிடம் அந்த உறவை கைவிடுமாறு அவர் கூறியுள்ளார் இதையடுத்து பிரியா கௌதம் ராஜ் உடனான ஒரு அவை கைவிடுவதாக இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் பிரியாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் கௌதம்ராஜ்  ஆகிய இருவரும் முருகேசனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி உள்ளனர் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்களது கொலை திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்

பின்னர் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்லும்போது முருகேசனுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார் பிரியா. கௌதம்ராஜ் கத்தி மற்றும் அரிவாளுடன் வீட்டில் மறைந்திருந்து உள்ளார். பாலைக் குடித்துவிட்டு முருகேசன் மயங்கிய நிலையில் இருவரும் முருகேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர் இந்நிலையில் மருந்தின் வீரியம் குறைந்ததால் விழித்துக் கொண்டார் முருகேசன்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் உடனே அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். முருகேசன் மனைவி குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தப்பியோட முயன்ற பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் கௌதம்ராஜ்  ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.