கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தொந்தரவு! கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை!

சென்னையில் கடந்த வியாழக்கிழமை அன்று கணவனைக் கொலை செய்த மனைவியையும் அவளின் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


காஞ்சிபுரம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முருகன் 29 அவரது மனைவி மஞ்சுளா 25 திருமணம் ஆன நிலையில் முருகன் அதே பகுதியில் தோட்டவேலை பார்த்து வந்துள்ளார். முருகனின் மனைவி மஞ்சுளாவுக்கும் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த சிவா 28 என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது இதைத்தொடர்ந்து தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

சென்னை மதுராந்தகம் பகுதியில் தோட்ட வேலை பார்த்து வந்த தனது கணவன் முருகனை கொலை செய்யும்படி சிவாவிடம் மஞ்சுளா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முருகனை இருவரும் திட்டமிட்டு முருகனின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மஞ்சுளா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி சோதனை செய்தனர் அப்போது முருகனின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர்.  பின்னர் மஞ்சுளா மற்றும் சிவாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது போலீசாரின் கேள்விகளுக்கு மஞ்சுளா தட்டுத்தடுமாறி பதிலளித்துள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மஞ்சுளாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் மஞ்சுளா கூறியதாவது தனக்கும் சிவாவுக்கும் உள்ள கள்ளத்தொடர்பை முருகன் கண்டுபிடித்து விட்டதாகவும் அதை கைவிடுமாறும் மஞ்சுளாவிடம் சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மஞ்சுளா தன் கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். தன் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மஞ்சுளா தோட்டத்திலேயே வைத்து முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

இதைதொடர்ந்து சிவாவை சம்பவ இடத்திற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து முருகனை தீர்த்துக்கட்டி உள்ளதாக போலீசார் விசாரணையில் மஞ்சள் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மஞ்சுளா மற்றும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.