நண்பனின் மனைவியை ஆசை நாயகியாக்கிய இளைஞன்! பிறகு அரங்கேற்றிய கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்!

ஹரியானா மாநிலம் குர்கானில் கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதாக ஒரு பெண்ணையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


குர்கானில் அரவிந்த் என்பவரின் மர்ம மரணம் தொடர்பான தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவரது மனைவி அனிதா, தனது கணவனுக்கு காலை உணவு கொடுக்க வந்தபோது அவர் இறந்து கிடந்ததாகவும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் அதே பகுதியில் வேறொரு குடியிருப்பில் வசிக்கும் அரவிந்தின் தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சில ஆண்டுகளுக்கு முன் அரவிந்தின் குடியிருப்பிலேயே வாடகையைப் பகிர்ந்துகொண்டு அவரது நண்பனான ராஜன் குடியேறியதாகத் தெரிவித்தார். 

இந்நிலையில் ராஜனுக்கும், அரவிந்தின் மனைவி அனிதாவுக்கும் தவறான தொடர்பு எற்பட்டதாகவும் அதை அறிந்துகொண்ட அரவிந்த் ராஜனை வீட்டில் இருந்து  வெளியேற்றியதாகவும் கூறினார். இதனால் அங்கிருந்து  வெளியேறிய ராஜன் அருகிலேயே வேறொரு குடியிருப்புக்கு மாறியதாகவும், அங்கு அனிதா அவ்வப்போது சென்று வந்ததாகவும் அதனை அரவிந்த் கண்டித்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அரவிந்தை கொல்லத் திட்டமிட்ட அனிதாவும், ராஜனும்  அரவிந்த் உறங்கிக் கொண்டிருந்தபோது  கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு மாரடைப்பு நாடகம் ஆடியது  போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நண்பன் என்று அரவிந்த் நம்பி ராஜனை வீட்டில் அனுமதித்துள்ளார்.

ஆனால் நண்பனின் மனைவி என்று தெரிந்தும் அனிதாவிடம் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டதுடன் நண்பனையே கொலை செய்த ராஜனுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.