கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்! நேரில் பார்த்த மனைவி அரங்கேற்றிய கொடூரம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்


தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர்  தனது 2-வது மனைவி பூங்கொடி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தனர். கணவன் மனைவி இருவரும் ஒன்றாக விசைத்தறி தொழிலை செய்துவந்தனர். இந்நிலையில் வேலை செய்யும் இடத்தில் கல்யாண சுந்தரம் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் இது கள்ளக்காதலானதாகவும் கூறப்படுகிறது.  பணி செய்யும் இடத்திலேயே இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பூங்கொடி நேரில் பார்த்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில். நேற்றைய தகராறின போது இனி தன்னுடன் வேலைக்கு வரவேண்டாம் என கல்யாணசுந்தரம் கூறியதாகவும், இதனால் பூங்கொடி ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலையில்  தூங்கிக் கொண்டிருந்த கணவரின் கழுத்தை பூங்கொடி கத்தியால் அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் குடும்ப பிரச்சனையால் தனது கணவரை கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர். ஆனால் கழுத்து அறுக்கப்பட்டது, அங்கிருந்த சூழல் உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவர்கள் பூங்கொடியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுவடைந்தது. இறுதியில் தனது கணவனை கழுத்தை அறுத்துக் கொன்றதாக ஒப்புக்கொண்ட பூங்கொடியை போலீசார் கைது செய்துள்ளனர்.