கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க கணவன், குழந்தை கொலை! இளம் பெண் வழக்கில் பகீர் தீர்ப்பு!

வேலூர் அருகே வசித்து வந்த தீபிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என காவல்த்துறையில் புகார் அளித்திருந்திருந்த நிலையில் தொடங்கிய விசாரணையில் தீபிகா கொலையாளி என்று உறுதியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த தீபிகா, கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என்ற புகாரினை அளித்த நிலையில் இது குறித்து விசாரணையில் தீபிகா தான் அந்த கொலையை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மேலும் இருவரது உடலையும் வீட்டின் அருகே புதைத்துள்ளதாக அவரே விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தீபிகாவின் வாக்குமூலத்தின்படி புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்ப்படுத்தபட்டது.

விசாரணையை அடுத்து ஆற்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, தீபிகாவிற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில்  ஜெயராஜ் என்பவரிடமும்  போலீசார் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். ஜெயராஜ் உடனான கள்ளக்காதலை கண்டித்ததால் தான் தீபிகா இந்த கொலையை செய்துள்ளார். உடல்களை அடக்கம் செய்ய ஜெயராஜ் உதவியுள்ளார்.