கள்ளக் காதலுக்கு தடை போட்ட கணவன்! காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி! இப்போ கள்ளக்காதலர்கள் மாமியார் வீட்டில்

மதுரையில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதுரையைச் சேர்ந்தவர் தென்னரசு 38, இவருக்கும் விஜயலட்சுமி 25, ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தென்னரசு கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது கணவர் தென்னரசுடன் பணியாற்றும் அவரது நண்பரான சரவணன் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விஷயம் தென்னரசுவிற்கு தெரியவரவே விஜயலட்சுமியை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தன் கணவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என சரவணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி தென்னரசு மர்மமான முறையில் வீட்டில் இருந்த கிடந்துள்ளார். விஜயலட்சுமி உடனே அக்கம்பக்கத்தினர் அழைத்து தனது கணவர் அதிகமான குடி பழக்கத்திற்கு அடிமையானால் மஞ்சள்காமாலை நோய் காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் தென்னரசு வீட்டார் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விஜயலட்சுமிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் கேள்விகளுக்கு விஜயலட்சுமி தடுமாறி தடுமாறி பதிலளித்துள்ளார் இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

பின்னர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தன் கணவரை கொலை செய்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.